சனி, 18 அக்டோபர், 2008

"வீராங்கனைப் பாட்டி"

இது லண்டனில் நடந்த ஒரு உண்மை சம்பவம். மூன்று இளைர்கள் ஒரு அறுபத்து எட்டு வயது மூதாட்டியின் பணப்பையை திருடிக்கொண்டு தப்பித்து ஓட முயற்சி செய்தபோது, சம்பந்தப்பட்ட மூதாட்டி அந்த மூன்று இளைர்கள் வேகமாக ஓடி மீண்டும் அந்த மூன்று இளைர்களைப் பிடித்து தனது பணப்பையை மீண்டும் பெற்றுக்கொண்டாராம்.

இது எப்படி சாத்தியம் என்று காவல் துறையினர் விசாரணை செய்த பொழுது,அந்த மூதாட்டி முன்னாள் நீண்ட தூர ஓட்ட போட்டிகளில் மிகவும் பெயர்போனவர் என்று தெரிய வந்துள்ளது.ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அட்டையைப் பார்த்து புத்தகத்தை எடைபோடாதே என்று.அந்த மூன்று இளைர்களும் அந்த பாட்டியின் வயதையும் தப்பாக எடைபோட்டு விட்டார்கள்.

16 ஆம் திகதி அன்று வெளியாக்கப்பட்ட "தி ஸ்டார்" நாளிதழில் இந்த செய்தியை வாசித்தேன். அந்த செய்தியைப் படித்த எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும், பாட்டியின் தைரியத்தை நினைத்து எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு நகைச்சுவை சம்பவமாக இருந்தாலும், இதற்குப் பிறகு லண்டனில் வசிக்கும் இளைர்கள் வயதானவர்களிடம் சற்று கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

ஆக்கம்: கலையமுதன் ரவீந்திரன்

(
தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு கலையமுதன்.
பாராட்டத்தக்க பாட்டி :)
சாதிக்க வயது தடை இல்லை என்பதை நிரூபித்துவிட்டார்.

//இதற்குப் பிறகு லண்டனில் வசிக்கும் இளைஞர்கள் வயதானவர்களிடம் சற்று கவனமாகத்தான் இருக்க வேண்டும். //

அங்கு மட்டுமல்ல, இங்கு நானும் தான்.

வெளித்தோற்றத்தையும் வயதையும் பார்த்து எவரையும் குறைந்து மதிப்பிடக்கூடாது.

பகிற்வுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

மன்னிக்கவும்

*நாமும் தான்

பெயரில்லா சொன்னது…

Good Senario in London...I like the article.Continue your contributions...Well done!!!