செவ்வாய், 30 செப்டம்பர், 2008

சிரிக்கவா? சிந்திக்கவா?

வகுப்பறை ஒன்றில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் போதித்து கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆசிரியர் மாணவன் ஒருவனிடம் கேள்வியும் கேட்கிறார்.........

ஆசிரியர்: மாணவர்களே! ஒரு மாணவன் என்ற முறையில் நீங்கள் அனைவரும்
ஆசானகிய நான் கற்று தரும் அனைத்தையும் ஆழமாகமனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும்.மேலும் தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தன்னை தெளிய படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள்: ஆம் ஐயா !

ஆசிரியர்: இதைத் தவிர்த்து எந்த ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடத்தை புரிய
வைக்க இயலவில்லையோ அவன் ஒரு மாங்கா மடையன் ஆவான்.
என்ன நான் சொன்னது புரிந்ததா மாணவர்களே?

மாணவர்கள்: புரியவில்லை ஐயா...

துணுக்குகளை படித்து மகிழ்ந்தால் மட்டும் போதாது மாறாக அதனுள் விளக்க படும் முக்கிய கூறுகளை நாம் கண் கூர்ந்து கவனித்து நம்மில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். பயிற்சி ஆசிரியராக திகழும் அனைவருக்கும் இத்துனுக்கு ஒரு அறிவுரையே.....

மலேசிய ஆசிரியர்களின் தரம் குன்றாமல் இருக்க குறிப்பாக இந்திய ஆசிரியர்கள், மேலும் சிறப்பாக இயங்க இறைவனை பிராத்திப்போம்.
நன்றி வணக்கம்.

ஆக்கம்: கீர்த்தி செல்வராஜூ
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

ஆசிரியர்கள்

கடவுளை விட இந்த உலகில் மேற்ப்பட்டவர்கள் இருக்கிறார்களா?இதென்ன இப்படியொரு கேள்வி என்று அனைவரும் வியப்படையலாம்.ஆனால் கடவுளை விடவும் அப்பார்ப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள்தான் ஆசிரியர்கள். "மாதா,பிதா, குரு, தெய்வம்" என்று நம் முன்னோர்களின் கூற்றே இதற்கு ஒரு நல்ல சான்றாகும்.நம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையை அடுத்து ஆசிரியர்களைத்தான் நாம் போற்றி மதிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்?அவர்களுக்கு ஏன் இப்படியொரு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பலர் மனதிலும் கேள்வி எழலாம்.ஆசிரியர் என்பவர் யார்?எவரொருவர் மற்றவரின் அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கிறாரொ அவரே ஆசிரியர் எனச் சொல்ல தகுதி உடையவர். ஏனென்றால், கல்வி கற்காதவர்களை குருடர்களுக்குச் சமமாக கருதுவதாக திருவள்ளுவரே தன் குறளில் உரைத்துள்ளார்.

இவ்வுலகில் இருக்கும் செல்வங்களிலே அழியாமல் நிலைத்திருப்பது கல்வி செல்வம் மட்டும்தான். அவ்வாறான அழிவில்லாச் செல்வத்தை வழங்குகின்ற ஆசிரியர்களைப் பற்றி கூறுவதற்கு இந்த ஒரு ஜென்மம் போதாது என்று சொன்னால் அதில் சிரிதளவும் ஐய்யமில்லை. ஆசிரியர்கள் ஒரு மெழுகுவர்த்திக்கு ஒப்பானவர்கள்.இதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் தன்னைத்தானே அழித்துக் கொண்டு மற்றவர்களின் வாழ்க்கைக்கு ஒளியைத் தருகின்றவர்கள். ஒரு வீட்டின் முன்னேற்றமோ சரி அல்லது நாட்டின் முன்னேற்றமோ அவர்கள் கல்வியை கற்றுக்கொடுக்கும் முறையில்தான் உள்ளது. பாடத்திட்டத்தில் சொல்லப்பட்ட கல்வியைத் தவிர வாழ்க்கைக் கல்வியையும் மாணவர்களுக்கு கற்றுத் தருபவர்கள்தான் ஆசிரியர்கள்.

வெள்ளைக் காகிதத்திற்கு ஒப்பான மாணவர்களை அழகான ஓவியமாக்குவதோ ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. நமது நாடு 2020- ஆம் நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில் மற்றத் துறைகளுக்கு ஈடாக ஆசிரியர் துறையும் பல மாற்றங்களைக் கண்டு வருகின்றது. சுருங்கக் கூறினால், வருங்கால ஆசிரியர்கள் இன்னும் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. நானும் ஒரு வருங்கால ஆசிரியைதான்.

எனவே, எதிர்காலத்தில் ஆசிரியர் துறையில் என்னென்ன மாற்றங்கள் நேர்ந்தாலும் அதற்கேற்ப நம்மைத் தயார்ப் படுத்திக் கொண்டு சிறந்த மாணவர்களை உருவாக்குவதையே முதன்மை லட்சியமாக கொள்ள வேண்டும். நானும் எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவேன் என்று நம்புகிறேன்.

தொடரட்டும் ஆசிரியர்களின் பணி...

ஆக்கம்: ரேகா ராஜு
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

வியாழன், 25 செப்டம்பர், 2008

தமிழ் பேச வெட்கமா!?

"தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்.." என்று கவிஞர் பாரதிதாசன் பாடியிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.


மகாகவி சுப்பிரமணிய பாரதி

நாம்
பிறந்தது தமிழ் தாயின் மடியில்! அவள் பேசும் அந்த தமிழில்தான் எத்தனை சுவை! எத்தனை இன்பம்! தமிழ் மொழி பேசுவதால், படிப்பதால் நமக்கு மட்டும் பெருமை இல்லை; மாறாக நம்மை ஈன்ற தமிழ் தாய்க்குத்தான் பெருமை.

பல சிறப்புகள் உள்ளடங்கியுள்ள தமிழ் மொழியின் அருமையை உணராதவர்களும் இப்புவியில் இருக்கிறார்கள் என்பதை அறியும் போது தமிழுள்ளங்களின் நெஞ்சம் குமறதான் செய்கிறது. ஒரு சிலர் நன்கு தமிழ்ப் பேசத் தெரிந்தாலும் "எனக்கு தமிழ்ப் பேசத் தெரியாது ", என்றுக் கூறிக் கொள்வதில் ஒருவகை பெருமிதம் கொள்கின்றனர். மேலும் தமிழ்ப் பேச வெட்கப் படுவோரும் உண்டு. தாங்கள் தமிழர்கள் என்பதையே மறந்து ஆங்கிலத்தில் சொற்களை அள்ளி வீசுவோரும் உண்டு. இதனைக் காணும்போது சொந்த தாயே மறந்துவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

"கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்று பொய்யா மொழி புலவர் கூறியுள்ளார். தெவிட்ட தேனைப் போல தமிழ் இருக்க, ஆளுமைக் குணம் கொண்ட ஆங்கிலேயர்களின் மொழி எதற்கு? கனியை தமிழ் இருக்க , கையான ஆங்கிலம் ஏன் நம்மவர்களை கவர்கின்றது? படித்தவர்களே தமிழைப் படிக்க நானும் போது பாமரர்கள் என்ன செய்வார்கள்? இன்னும் சிலர் ஒரு படி மேல் சென்று
" எனக்கு கொஞ்சம் கொஞ்சம்தான் தமிழ் தெரியும் " என்று தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்துப் பேசி தாய் மொழியையே இழிவுப் படுத்துகின்றனர்.

பன்மொழிப் புலவரான பாரதியே "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல இனிதாவது எதுவும் இல்லை" என்றுக் கூறியுள்ளார். ஆனால், இத்தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழும் மக்களோ நாகரீக மோகத்தில் தமிழின் அருமை பெருமை அறியாது அதனை மறுக்கிறார்கள் ;மறக்கிறார்கள்;வெறுக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல், தமிழ்ப் பேசுபவர்களைக் கண்டால் ஏதோ ஒருவகை ஏளனம் அவர்களது கண்களில் தெரிகின்றது. இன்றைய காலத்தில் தமிழ் பேசுபவர்களை எளிதில் விரல் விட்டு எண்ணி விடலாம். "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என வாழ்பவர்கள் இனி இல்லை என்றே சொல்லும் நிலையை அடைந்திருக்கிறது.

கல் தோன்றி மண் தோன்றாது காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி , அப்படியொரு நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மொழியைப் பேச நாம் பெருமைக் கொள்ள வேண்டும்.

"வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்"

என்று வாயளவிற்கு மட்டும் கூறிக் கொண்டிருக்காமல் நமது அன்றாட வாழ்வில் தமிழ் மொழிக்கு ஒரு சிறப்பு இடத்தை அளித்து முன்னோடியாக கொள்ள வேண்டும். பிற மொழிக்கு வழங்கும் முக்கியத்துவத்தை தாய் மொழிக்கும் வழங்கி ஒரு உண்ணத நிலையை அடைய தமிழர்களாகிய நாம்தான் பாடு பட வேண்டும்.

இறுதியாக, எக்காலத்திற்கும் பொருந்தும் செம்மை மொழியான தமிழ் மொழியின் சுவையினை அனைவரும் ருசித்து பயனடைய வேண்டும். அதோடு, தமிழ் மொழி தாழ்ந்து போகாமல், தழைத்து வாழ நாம் அரும்பாடு படு எனக் கூறி விடை பெறுகிறேன்.

"முதலில் தோன்றிய மனிதன் தமிழன்
முதல் மொழி தமிழ் மொழி-அதுதான்
எங்கள் தாய் மொழி"


ஆக்கம்: ஷாலினி நடராஜன்
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

அடியேன் எண்ணங்களில் அலைபாய்ந்து கொண்டிருக்கும்,மலேசியாவில் இன்றைய தமிழின் நிலைமை. (அலைகள் இரண்டு)

நாம் பேசியவை அனைத்தையும் மறுபடியும் சிந்திப்போம் மீண்டும் தொடருவோம்.... இன்றைய சிறு எண்ணம் யாதெனில் பெற்றோரின் கடமையாகும்.ஆம் தமிழை வளர்க்க பெற்றோரின் கடமையே மிக முக்கியம் என கூறலாம். நமது நாட்டில் தமிழின் நிலைமை மங்கி போய விட்டது போல் தோன்றுவதற்கு இந்திய பெற்றோர்களே மூலக் காரணம்.


அதாவது அன்பர்களே பெற்றோர்கள் பலர் தாய் மொழியான தமிழ் மொழி மீது அக்கறை கொள்ளாமல் தங்கள் பிள்ளைகளை தேசிய மொழி பாட சாலைக்கு அனுப்பி வைக்கின்றனர். இம்மாதிரியான சம்பவம் நமது நாட்டில் பரவலாக நிலவுவதற்கு அடிப்படையே இந்திய பெற்றோர்களின் தவறுதலான அபிப்ராயமே! அதாவது பெரும்பான்மையினர் தமிழ் பள்ளி கூடங்களுக்கு அனுப்பினால் தங்கள் பிள்ளைகள் தேசிய மொழியையும், ஆங்கில மொழியையும் சரியாக கற்று கொள்ள மாட்டார்கள் என்றும் மறு பக்கம் ஆசிரியர்கள் தமிழில் மட்டுமே போதித்து , பெரும் அளவில் தமிழிலே புரிய வைப்பதாக எண்ணி பிள்ளைகளின் மொழி ஆற்றலை வலு படுத்தாது; என்றும் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர். ஆக, பெற்றோர்கள் தங்களின் தவறான மன போக்கை தவிர்ப்பது நல்லது.

மேலும் சொல்ல போனால், சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளிக் கூடத்திற்கு அனுப்பாத காரணத்தை கேட்டால், பள்ளியின் நிலவரத்தை சுட்டி காட்டி அழகான மறுப்பு பதிலை தருகின்றனர்.



சுருக்கமாக சொல்ல சொன்னால் நமது தமிழ் பள்ளி கூடத்தின் தரம் உயர வில்லை மாறாக சரிகின்றது என பொருள் விளங்குகின்றது. அவர்கள் சொல்வதிலும் ஓரளவிற்கு உண்மை உண்டு ஆம், தமிழ் பள்ளி கூடங்களும் தேசிய மொழி பள்ளியை போலவும் சீன பள்ளி கூடங்கள் போலவும் காட்சி தந்தால் ; பெயர் பெற்றால் , சிறந்து விளங்கினால் நிச்சயம் நமது மலேசிய இந்தியர்கள் தங்களது செல்வங்களை தமிழ்ப்பள்ளிக் கூடங்களுக்கு அனுப்புவார்கள் என நம்புவோமாக.......

எண்ணங்கள் மீண்டும் அலை பாயும் .........

ஆக்கம்: கீர்த்தி செல்வராஜூ
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

புதன், 24 செப்டம்பர், 2008

உலகம் வியக்கும் காதலே!

ஷாஜஹான் தனது காதல் மனைவிக்கு அன்பின் அடையாளமாக தாஜ்மஹால் எழுப்பியது மாதிரி பெண்களில் கணவனுக்காக பிரமாண்டமான நினைவுச் சின்னத்தை அமைத்த வரலாறு.....


பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியான காரியா எனும் நாட்டை, முன்பு (கி.பி 377) ஒரு சிற்றரசன் ஆட்சி செய்தான்.
அவன் பெயர் மாசோலஸ் (அவர்கள் மொழியில் ஆணழகன்).
அவனை ஆர்ட்டிமிர்ஸியா என்ற பெண் காதலித்தாள்..
இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தார்கள்.
திருமணம் செய்துகொண்டார்கள் அன்பைப்பொழிந்து வாழ்ந்து வந்தனர்... துரதிர்ஷ்டவசமாய் மாஸோலஸ் நோய்வாப்பட்டு,
இளம் வயதிலேயே இறந்து போனான்..
ஆட்சிப்பொறுப்பை ஏற்கவேண்டிய கட்டாயம் அவளுக்கு...
ஆனால் அவனது நினைவு அவளை மிகவும் வாட்டியது
மனதிற்குள் அழுதாள், புலம்பினாள்.
அந்த நினைவுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தாள்..
உலகத்தின் புகழ்ப் பெற்ற சிற்பிகள் வரவழைக்கப்பட்டார்கள்..

36 தூண்கள் அமைக்கப்பட்டன..
விண்முட்டும் அளவில் 24 அடுக்குகள் கொண்ட விமானம் அமைக்கப்பட்டது.. நடுவில் கல்லறை..
அதற்குமேல் மாசோலஸ் மன்னருடைய பிரமாண்ட சிலை..
கல்லறைக்குச் செல்ல 200 படிகள்..
கண்ணைக் கவரும் ஓவியங்கள்..
இப்படி எல்லாரையும் கவரும் வகையில் நினைவுச் சின்னம் அமைத்து
அதற்கு மாசோலியம் என்று பெயரிட்டாள்.


இது உலகின் பழம்பெறும் கலை அதிசயமாக போற்றப்பட்டு வருகிறது.
மேலும் இம்மன்னரின் பெயர் இது போன்ற கட்டிட கலை மற்றும் அமைப்பு கொண்ட அனைத்து கட்டிடங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மனைவிக்காக ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால், மாசோலஸிற்கு காதல் மனைவி கட்டிய உன்னத மாசோலியம்!
உணர்ந்தால்…காதல் உயிரானது! என்றும் உயர்வானது!

ஆக்கம்: மலர்விழி சுப்ரமணியம்
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

ஐயோ… விட்டு விடேன்...

எத்துணை ஏக்கம்
என் மீது எனக்கு...
நாள்தோறும் பார்த்தாலும்
இப்படி என்னை அள்ளுகிறாயே!
காற்றுக்குக்கூட இடம் தர மறுத்து என்னை மூச்சடைக்க உராய்ந்து செல்கிறாயே! நீ தொட்டவுடன் சில்லிட்டு போகிறேன்
உன் குறும்பில் என்னையே துறக்கிறேன்..
உன் கொஞ்சல் சுகமானது என்றாலும்
நேரம் தடுக்கிறது...
விட்டு...விடு...நான் போகணும்...
உன்னால் கண்டப்படி முழுதும் நனைந்தேன்
விட்டு விடேன்...ஐயோ பிலீஸ்...
உன்னை விட்டு போகவும் மனமில்லை
இப்ப போய்...அப்புரமா வரேன்.. சரியா?
போதும் நிறுத்து...ரொம்ப குறும்பு - உனக்கு…
இரு...இரு...பீலியை அடைத்து விட்டால்
என்ன செய்ய முடியும்?! - உன்னால்
செல்லமே, உன்னில் நனைய;
உன்னை இரசிக்க எனக்கும் ஆசைதான்..
தயாராய் இரு...அப்புரமாய் வரேன்..
காத்திரு என் குளியலரை நீரே!!!



ஆக்கம்: மலர்விழி சுப்ரமணியம்
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

புதிய கதவுகள்



தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி

நான் பிறந்தது ஜொகூரில் ,
ஆனால் வளர்ந்தது சிரம்பானில்,
மீண்டும் வந்தேன் பிறந்த மண்ணிற்கே,
14ஆம் தேதி என் கால் தடம் 18 வருடங்களுக்குப் பிறகு ஜொகூரில் பட்டது.

புதிய நண்பர்கள்,
புதிய சுற்றுச்சுழல்,
புதிய முகங்கள்,
புதிய அனுபவங்கள்,
இருந்தாலும்,அன்பான வரவேற்பு என்னை மாற்றியது.

திறமையான ஆசிரியர்கள்,
"அன்பும் பண்பும் நிறைந்த சீனியர்ஸ்",
பல மாநிலங்களில் இருந்து வந்த நாங்கள் ஒன்றாக்கப்பட்டோம்.

கண்டிப்பான அப்பாவைப் பிரிந்து,
அன்பான அம்மாவைப் பிரிந்து,
வந்த சோகங்கள் இங்குள்ள நண்பர்கள்,
மூத்தவர்களால் போக்கப்பட்டது.

முதல் நாள் ஐந்து ஆண்டுகள் எப்போது முடியுமென்று எண்ணினோம்,
ஆனால், இரண்டாவது நாளே ஐந்து வருடங்கள் முடிந்துவிடக்கூடாது என்று கடவுளை வேண்டினோம்.

ஒரு வாரம் உருண்டோடியது,
புதியதொரு வாரமும் வந்தது,
புதிது வாரம் மட்டுமல்ல,
எங்களின் லட்சியமும்தான்.

ஆக்கம்: கலையமுதன் ரவீந்திரன்
(
தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)