வாழ்க்கை என்பது கடலில் செல்லும் படகு. அதில் பிடிமானம் இருந்தால்தான் கரைச் சேர முடியும். அதேபோல் கல்வி இருந்தால் வாழ்வில் முன்னேற முடியும். வாழ்கையை ஒளி வீச வைக்கும் விளக்காக கல்வி திகழ்கின்றது. கல்வி என்பது கல் மாதிரி மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகும். கல்வி சவால் நிறைந்த அனைத்திற்கும் துணைப் போல் நின்று துனைப்புரிகின்றது.
கல்வி மனித வாழ்வின் அடிப்படை என்று கூறினால் மிகையாகாது. இவ்வுலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளோடு ஒப்பிடும் போது மனிதனே தனித்து காணப்படுகிறான். இதற்கு கடவுள் மனிதனுக்கு மட்டுமே படைத்துள்ள சிந்தனைத் திறனே காரணமாகும். அந்த சிந்தனைத் திறனை நன்முறையில் பயன் படுத்தி பல சாதனைகளைப் படைப்பதற்கு ஊன்றுகோலாக அமைவதே கல்வி ஆகும்.
கல்வி என்பது அமிர்தம் நிறைந்த கடலாகும். எனவே, பிறந்த பலனை முழுமையாக அடைய அக்கடலில் மூழ்கி எழ வேண்டும். கல்வி எல்லையற்றது. அது அமுதச்சுரபி போல் பயன் படுத்த வந்துக் கொண்டேயிருக்கும். "கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு" என்பது இதற்கு ஒரு சான்றாகும்.
வாழ்வில் வெற்றிப் பெற தன்னம்பிக்கையும் மனவுறுதியும் மிக முக்கியம் என்று அறிவியல் பூர்வமாக கண்டு பிடித்துள்ளனர். இவ்விரண்டும் கல்வியினாலே கிடைக்கும் என்பதே சிறப்பான ஒன்றாகும். கல்வி என்ற மூன்று எழுத்து மனிதனின் தலை எழுத்தை நிர்ணயிக்கின்றது என்று தாராளமாக கூறலாம்.
ஆகவே,கல்வி என்பது வாழ்கையை ஒளி வீசும் விளக்காகும். கல்வியினால் சிறந்த விளங்கி நாட்டின் நற்பெயரை உச்சிக்குக் கொண்டு செல்லுதல் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இத்தனை உணர்ந்து கல்விக் கற்ற சமுதாயமாக திகள தகுந்த நடவடிக்கைகளை வகுக்க வேண்டும்.
ஆக்கம்: ஷாலினி நடராஜன்
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)
1 கருத்து:
:) படித்து முடித்தவுடன்...குழந்தை செல்வங்களின் வாழ்வில் கல்வி எனும் கல்லை அழகாய் செதுக்க போகும் ஒரு சிற்பி நான் என பெருமைபடுகிறேன்!
ஆசிரியர்களாக நாம் செயல்படுத்தும் ஒவ்வோர் நடவடிக்கையும் அந்த மழலை சிற்பம் எழில் பெற்று மிளிர உதவும்!
கல்வி செல்வம் பெற்று மக்கள் உயர்க!
நற்பணி செய்து ஆசியர்கள் வாழ்க!
கருத்துரையிடுக