திங்கள், 6 அக்டோபர், 2008

தடுமாறும் இளமையில் காதல்

காதல் என்றால் என்ன? காதல் எப்படிப்பட்டது ? காதல் எவ்வாறு அமைய வேண்டும் ? என்றெல்லாம் இக்காலக்கட்டத்தில் எவருமே அறிந்திருக்க வில்லை, முக்கியமாக நம் இளையோர்கள்! காதல் என்பது நமக்கு ஒருவர் மீது ஏற்படக்கூடிய தூய்மையான, தெய்வீகமான, உன்னதமான, அன்பு பாசம் உணர்வு மற்றும் பிணைப்பு என பல்வேறு வார்த்தைகளால் அடுக்கிக் கொண்டே போகலாம். காதலை எவன் ஒருவன் தன் வாழ்வில் போற்றுகிரானோ அவனே காதலின் மாண்பை அறிந்தவன் ஆவான்.

ஆனால், இன்றைய காலக் கட்டத்தில் காதல் நம்மவர்களுக்கு ஒரு விளையாட்டு பொம்மையாக அமைந்து விட்டது. இப்பொழுது எல்லாம் ஆண்களோ சரி பெண்களோ சரி இவன் இல்லை என்றால் இன்னொருவன் என்றும் இவள் இல்லை என்றால் இன்னொருவள் என்றும் அவர்களின் என்னத்தை மாற்றிக் கொண்டனர். காதலின் முக்கிய அம்சமே ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதை நம் இளையோர்கள் உணர வில்லை. சுருங்கக் கூறின் சில மாதங்களுக்கு ஒரு முறை தங்களின் காதலன் அல்லது காதலியை மாற்றிக் கொள்வது இந்த நவீன நீரோட்டத்தில் இளையோர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவே அமைந்து விட்டது. இதற்க்கு காரணம்....??? ஒன்று மேற்கத்திய மோகம் இன்னொன்று சினிமா........ சினிமாவில் எப்படி கதாநாயகன் கதாநாயகியின் அழகைக் கண்டு சில வினாடிகளில் மயங்குகிரானோ அது போலவே தன்னையும் கதாநாயகனாக நினைத்து உடனே காதலில் விழுகிறார்கள். சினிமா காட்சி போல தங்களின் காதலை கடிதம் மூலமும் குறுந் செய்தி மூலமும் வெளிப் படுத்தி கொள்கின்றனர். குறுந் செய்தி மூலமாக வெளிப் படுத்தக் கூடிய விஷயமா காதல்???


தனக்கு தானே எது நல்லது எது கேட்டது என்று முடிவெடுக்க தெரியாத வயதில் காதலிக்க வேண்டியது. சினிமா காட்சி போல காதலியை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றி விட்டு பெற்றோர்கள் பணத்தில் சில நாட்களுக்கு சந்தோஷமாக இருந்து விட்டு பிறகு பழைய காதலியை விட இன்னும் கொஞ்சம் அழகான பெண்ணை பார்த்தும் பழைய காதலியைக் கை விட்டு விடுவதே இக்கால ilaiyorgalin வேலையாகும். இதை விடக் கொடுமை அப்பெண்ணும் ஒருவன் தன்னை விட்டுசென்றதும் வேறொருவனுடன் ஊர் சுற்றுவதே ஆகும். மாற்றி மாற்றி காதலிக்க காதல் என்ன ஆடிய இளையோர்களே?

ஆகவே, ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி சினிமாவைப் பார்த்து காதலை இழிவு படுத்தக் கூடாது. சினிமா மூன்று மணி நேரமே! ஆனால் வாழ்கை? யோசித்து பாருங்கள், சினிமா காட்சிகள் வாழ்கையின் நடை முறைக்கு ஒத்து வராத ஒரு விஷயம். சினிமாவிலும் நல்ல காட்சிகளை காதலுக்க்காகவே படைத்துக் காட்டுகிறார்கள். காதலை அடைய என்ன பிரச்சனை நேர்ந்தாலும் போராடி அதை அடைய வேண்டும். ஆனால், இன்று காதலுக்காக போராடுகிறவர்களை யாரும் உதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை, காதல் பெயரை சொல்லி தற்கொலை செய்து கொள்பவர்களை பார்த்து தற்காலத்தில் தற்கொலை செய்து கொள்ளும் கோழையான இள காதலர்கள் இன்னும் கூட இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனவே, இளையோர்களே காதல் என்பது நமக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை ஏற்படுத்திக் கொள்வதில் உதவும். இள வயதில் காதலிப்பது தவறல்ல, அக்காதல் உண்மையானதா? நிலைத்து நிற்கக் கூடியதா? அக்காதல் பக்குவப் பட்டதா? என சிந்தித்து செயல் பட வேண்டும். இள காதலர்களே சிந்தியுங்கள் பல முறை சிறந்த முடிவுக்காக.......!

"காதல் ஒன்றும் முக அழகைக் கண்டும் உடல் அழகைக் கண்டும்
வருவதில்லை அது அக அழகைக் கண்டு பூ பூப்பதாகும்"

ஆக்கம்: திலகவதி திருமலை
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

3 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

பயிற்சி ஆசிரியர்களுக்கு வணக்கம்,

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்காக 'வலைப்பூங்கா' என்றொரு புதிய திரட்டியை ஏற்படுத்தியுள்ளோம்.

'வலைப்பூங்கா'வைக் கண்ணுற்று கருத்துகள் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

http://www.pageflakes.com/Valaipoongaa/

பெயரில்லா சொன்னது…

மிக உண்மை தோழி..வேகமாக காதலில் குதிக்கும் இன்றைய இளையோர், விவேக முடிவுகளை எடுக்க தவறுகின்றனர்...
காதலுக்கு கண் இல்லைதான், ஆனால் அது கண் மூடிதனமாக மலரகூடாது..மலர்ந்தால் குருடாவது நாம் தான்...

இன்றைய ஆண்கள்...காதலிக்கும் பெண் நமக்கு சிறந்த இணையாக இருக்கிறாளா என்று மட்டும் பாராமல்,
நல்ல இல்லத்தரசியாக, மருமகளாக, அண்ணியாக, வருங்கால சந்ததிக்கு தாயாக...கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணும் குலமகளாக இருக்கிறாளா என்பதை ஆராய ஏன் தான் மறக்கிறார்களோ தெரியவில்லை!?

காதலுக்கு மனம் ரொம்ப முக்கியம்...மனதை ஆடைகள் மாற்றுவதை போல மாற்றாதீர்கள்..பெண்களே, ஓர் ஆணை மனதார விரும்பும் முன் சற்று யோசியுங்கள்! ஏற்றவனா என்பதை விட...அவனை ஏற்று அவனுடைய குடும்ப சூழலில் இணைந்து வாழ முடியுமா என்பதை சிந்தியுங்கள்! உங்களால் ஒரு குடும்பத்தில் குழப்பம் நேர கூடாது.

காதலிப்பவருக்கு,
நட்பு + புரிந்துணர்வு = காதல்

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ...என்றென்றும் அன்பை மட்டும் தொலைத்து தேடாதீர்கள்! அன்பு தொலையும் போது சந்தேகம் எனும் பேய் தலை நீட்டும்...சந்தோஷம் சாம்பலாகும்!

ஆக, இளைமை கால (காதல்) முக்கியம்...கவனமாய் இருங்கள்! இது தான் உங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரம்..காதலை தேடி அலைய வேண்டாம், உண்மை காதல் உங்களைத் தேடி வரும்!

காலமெல்லாம் காதல் வாழ்க, இளைமை தொடர்ந்து முதுமை வரை!

priyamudanprabu சொன்னது…

//////
"காதல் ஒன்றும் முக அழகைக் கண்டும் உடல் அழகைக் கண்டும்
வருவதில்லை அது அக அழகைக் கண்டு பூ பூப்பதாகும்"

////

சரிதான்
கல்லை மட்டும் கடவுளாய் எண்ணி திரியும் மூட பக்தனும்
உடல் அழகை மட்டும் பார்த்து காதல் செய்யும் இளையவர்களும் ஒன்று