என் மீது எனக்கு...
நாள்தோறும் பார்த்தாலும்
இப்படி என்னை அள்ளுகிறாயே!
காற்றுக்குக்கூட இடம் தர மறுத்து என்னை மூச்சடைக்க உராய்ந்து செல்கிறாயே! நீ தொட்டவுடன் சில்லிட்டு போகிறேன்
உன் குறும்பில் என்னையே துறக்கிறேன்..
உன் கொஞ்சல் சுகமானது என்றாலும்
நேரம் தடுக்கிறது...
விட்டு...விடு...நான் போகணும்...
உன்னால் கண்டப்படி முழுதும் நனைந்தேன்
விட்டு விடேன்...ஐயோ பிலீஸ்...
உன்னை விட்டு போகவும் மனமில்லை
இப்ப போய்...அப்புரமா வரேன்.. சரியா?
போதும் நிறுத்து...ரொம்ப குறும்பு - உனக்கு…
இரு...இரு...பீலியை அடைத்து விட்டால்
என்ன செய்ய முடியும்?! - உன்னால்
செல்லமே, உன்னில் நனைய;
உன்னை இரசிக்க எனக்கும் ஆசைதான்..
தயாராய் இரு...அப்புரமாய் வரேன்..
காத்திரு என் குளியலரை நீரே!!!
ஆக்கம்: மலர்விழி சுப்ரமணியம்
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)
13 கருத்துகள்:
nice poem malar.........
நன்றி....என் முதல் குட்டி முயற்சி...
hi malar...very nice poem...keep it up..try to write some more poems..al the best...
gud effort....
sure u got many more about tamil...
update it
@கண்மணி
நன்றி. மீண்டும் வருக:)
@பவானி
நன்றி தோழி...நிச்சயம் தமிழின் இனிமையை ஒன்றாய் பகிர்ந்து மகிழ்வோம்!!!
நல்லாயிருக்கு மலர்
ஆரம்ப வரிகளில் சற்று யோசிக்க வைத்து பின் குளியலறை நீரை பற்றி கூறுவதாய் முடித்திருப்பது அழகு
மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டியது
வாழ்த்துக்கள்
நிறைய எழுதுங்கள்
நன்கு உள்ளது...
@ பிரபு & விக்னேஸ்வரன்
நன்றிங்க...
தங்களைப் போன்றோரின் வாழ்த்துகளும் கருத்துகளும் தான் எங்களுக்கு சிறந்த வழிகாட்டி!
very nice!!!good job u have done!!!
carry on:-)
@ மேகலை
நன்றி..மீண்டும் வருக தோழி :)
கவி_தைய_தக்கா - மழலைக் குளியல்
உரைவீச்சில் நனைந்ததோ?
வாழ்த்துக்கள்.
@ Vasudevan Letchumanan
_மிக்க நன்றி :)
கருத்துரையிடுக