சனி, 20 செப்டம்பர், 2008

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு"

தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. தமிழ் திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில், சிலவற்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை ஆகும். இந்தியாவில் கி்டைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகாலில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன.பானையூலைகளில் எழுதப்பட்டதன் மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டு மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக அமைந்தது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2-ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.













பதினைந்தாம் நூற்றாண்டிலோ பதினாறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்ட கிறித்தவ சமய வழிபாட்டு ஓலைச் சுவடிகள்


மூலம்: விக்கிபீடியா தமிழில்

ஆக்கம்: கீர்த்தி செல்வராஜூ (தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

1 கருத்து:

Sathis Kumar சொன்னது…

அன்பு கீர்த்தி,

தெமெங்கோங் ஆசிரியர் பயிற்சிக் கழகத்திலிருந்து தமிழுக்காக ஒரு வலைப்பூ புயலாய் புறப்பட்டு உள்ளது, மிக்க மகிழ்ச்சி.

தொடங்கட்டும் உங்கள் தமிழ்ப் பணி.

தங்களின் சுயவிவரம் தேவை. நேரமிருந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

பி.கு : மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில் இணையுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

http://groups.google.com/group/MalaysianTamilBloggers

அன்புடன்,
சதீசு குமார்.