ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

ஆசிரியர்கள்

கடவுளை விட இந்த உலகில் மேற்ப்பட்டவர்கள் இருக்கிறார்களா?இதென்ன இப்படியொரு கேள்வி என்று அனைவரும் வியப்படையலாம்.ஆனால் கடவுளை விடவும் அப்பார்ப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள்தான் ஆசிரியர்கள். "மாதா,பிதா, குரு, தெய்வம்" என்று நம் முன்னோர்களின் கூற்றே இதற்கு ஒரு நல்ல சான்றாகும்.நம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையை அடுத்து ஆசிரியர்களைத்தான் நாம் போற்றி மதிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்?அவர்களுக்கு ஏன் இப்படியொரு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பலர் மனதிலும் கேள்வி எழலாம்.ஆசிரியர் என்பவர் யார்?எவரொருவர் மற்றவரின் அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கிறாரொ அவரே ஆசிரியர் எனச் சொல்ல தகுதி உடையவர். ஏனென்றால், கல்வி கற்காதவர்களை குருடர்களுக்குச் சமமாக கருதுவதாக திருவள்ளுவரே தன் குறளில் உரைத்துள்ளார்.

இவ்வுலகில் இருக்கும் செல்வங்களிலே அழியாமல் நிலைத்திருப்பது கல்வி செல்வம் மட்டும்தான். அவ்வாறான அழிவில்லாச் செல்வத்தை வழங்குகின்ற ஆசிரியர்களைப் பற்றி கூறுவதற்கு இந்த ஒரு ஜென்மம் போதாது என்று சொன்னால் அதில் சிரிதளவும் ஐய்யமில்லை. ஆசிரியர்கள் ஒரு மெழுகுவர்த்திக்கு ஒப்பானவர்கள்.இதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் தன்னைத்தானே அழித்துக் கொண்டு மற்றவர்களின் வாழ்க்கைக்கு ஒளியைத் தருகின்றவர்கள். ஒரு வீட்டின் முன்னேற்றமோ சரி அல்லது நாட்டின் முன்னேற்றமோ அவர்கள் கல்வியை கற்றுக்கொடுக்கும் முறையில்தான் உள்ளது. பாடத்திட்டத்தில் சொல்லப்பட்ட கல்வியைத் தவிர வாழ்க்கைக் கல்வியையும் மாணவர்களுக்கு கற்றுத் தருபவர்கள்தான் ஆசிரியர்கள்.

வெள்ளைக் காகிதத்திற்கு ஒப்பான மாணவர்களை அழகான ஓவியமாக்குவதோ ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. நமது நாடு 2020- ஆம் நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில் மற்றத் துறைகளுக்கு ஈடாக ஆசிரியர் துறையும் பல மாற்றங்களைக் கண்டு வருகின்றது. சுருங்கக் கூறினால், வருங்கால ஆசிரியர்கள் இன்னும் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. நானும் ஒரு வருங்கால ஆசிரியைதான்.

எனவே, எதிர்காலத்தில் ஆசிரியர் துறையில் என்னென்ன மாற்றங்கள் நேர்ந்தாலும் அதற்கேற்ப நம்மைத் தயார்ப் படுத்திக் கொண்டு சிறந்த மாணவர்களை உருவாக்குவதையே முதன்மை லட்சியமாக கொள்ள வேண்டும். நானும் எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவேன் என்று நம்புகிறேன்.

தொடரட்டும் ஆசிரியர்களின் பணி...

ஆக்கம்: ரேகா ராஜு
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

11 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//கடவுளை விட இந்த உலகில் மேற்ப்பட்டவர்கள் இருக்கிறார்களா?//

கடவுள் என எதை சுட்டுகிறீர்கள்...

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//ஆசிரியர்கள் ஒரு மெழுகுவர்த்திக்கு ஒப்பானவர்கள்.இதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் தன்னைத்தானே அழித்துக் கொண்டு மற்றவர்களின் வாழ்க்கைக்கு ஒளியைத் தருகின்றவர்கள்.//

இதற்கு விளக்கம் வேண்டுகிறேன் துளியும் புரியவில்லை... நீங்கள் படித்து அறிந்து ஒருவருக்கு போதிக்கின்றீர்கள் என்றால் அது அழிக்கும் செயலா?

நான் அறிந்து போதிக்கும் ஆசான் தான் இன்னும் சிறப்பாக கற்பிக்க வேண்டும் எனும் நோக்கில் மேலும் மேலும் படிக்கிறார்களே தவிற. தான் படித்ததை சொல்லிக் கொடுத்து தழ்ந்து போவதில்லை என்றே நினைக்கிறேன்...

நான் புரிந்தது பிசகு என்றால் விளக்கம் தேவை...

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சிறந்த சமுதாயத்தை பணியை, அதுவும் தமிழுக்காக நற்பணியில் ஈடுபடவிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

ஆதவன் சொன்னது…

ஆசிரியர்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்கள்தான்.

அதனால்தான், எழுத்தறிவித்தவன் இறைவனாகும் என்றார்கள் தமிழர்.

இன்றும், கையெடுத்துத் தொழக்கூடிய ஆசிரியர்கள் பலர் உள்ளனர்.

ஆயினும்,
தமிழ் மொழி அறிவு இல்லாத;
தமிழினப் பற்று இல்லாத;
தமிழ்ச் சமயத் தெளிவு இல்லாத;
பகுத்தறிவுச் சிந்தனை இல்லாத;
ஆசிரியர்கள் நிறையபேரை கண்கூடாகக் காணமுடிகிறது!!

வெறும் வயிற்றுப் பிழைப்புக்காகவும்
கூலிக்கு மாறடிக்கும் கூட்டமாகவும்
ஆசிரியர்கள் இருக்கக் கூடாது!!

பிறந்த இனத்திற்கும்
பெற்றிருக்கும் தாய்மொழிக்கும்
தக்கனவற்றைச் செய்யும் தகுதியையும் தரத்தையும் ஆசிரியர்கள் வளர்ர்த்துக்கொள்ள வேண்டும்.

'தாய்மொழி' வலைப்பதிவை நடத்தும் பயிற்சி ஆசிரியர் குழாம் இந்த வேட்கையோடு வளரவேண்டும்.

நீங்கள் நல்லாசிரியர்களாக உருவாகி மொழி, இன, கலை, பண்பாட்டு நிலையில் தாழ்ந்திருக்கும் தமிழ் மாணவரைக் கைதூக்கிவிட வேண்டும்.

செய்வீர்களா?

பெயரில்லா சொன்னது…

இதற்கு விளக்கம் வேண்டுகிறேன் துளியும் புரியவில்லை... நீங்கள் படித்து அறிந்து ஒருவருக்கு போதிக்கின்றீர்கள் என்றால் அது அழிக்கும் செயலா?

நான் அறிந்து போதிக்கும் ஆசான் தான் இன்னும் சிறப்பாக கற்பிக்க வேண்டும் எனும் நோக்கில் மேலும் மேலும் படிக்கிறார்களே தவிற. தான் படித்ததை சொல்லிக் கொடுத்து தழ்ந்து போவதில்லை என்றே நினைக்கிறேன்...

நான் புரிந்தது பிசகு என்றால் விளக்கம் தேவை...

...ஆசிரியர்கள் ஒரு மெழுகுவர்த்திக்கு ஒப்பானவர்கள், என்ப்தன் பொருள் என்னவென்றால்...
அவர்கள் கற்றறிந்தவற்றை மாணவர்களுக்காக கற்றுத்தறுகிறார்கள். தங்களுக்கு என்று பல வேலைகள் இருந்தலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மாணவர்களின் நலனுக்காக பாடுபடுகிறார்கள், ஆசிரியர்கள்.அதனால்தான் ஆசிரியர்களை மெழுகுவர்த்திக்கு ஒப்பிடுகிறார்கள்...இப்பொழுது புரிகிறதா விக்னேஸ்வரன்?!?

பெயரில்லா சொன்னது…

ரேகா...
உந்தன் படைப்பு அற்புதம்...ஆனால் நம்முள் எத்தனை பேர் ஆசிரியர் தொழிலை ஆத்மா ஆத்மவாகா நேசித்து செய்கிறார்கள்?

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சரி...

ஆசிரியர்கள் மட்டும் தான் அப்படியா? ஏங்க கொஞ்சம் யோசிச்சி பாருங்க... குமாஸ்தா வேலையில் இருப்பவர் முதல் குப்பை எடுப்பவர் முதல் எல்லோருக்கும் அவரவரது விடுபட்ட ஆசைகள் நிச்சயம் உண்டு...

பெயரில்லா சொன்னது…

குமாஸ்தா வேலையில் இருப்பவர் முதல் குப்பை எடுப்பவரும் 24 மணி நேரமும் அதே வேளையில் மூழ்கி கிடப்பதில்லை.மற்ற வேலைகள் செய்பவர்களை நாம் வெளியில் எங்குப் பார்த்தாலும் அவர்களை அந்த வேலை செய்பவர் என்று அழைப்பதில்லை.ஆசிரியர் ஒருவரை மட்டும் தான் வேறு எங்குப் பார்த்தாலும் அவர் என் ஆசிரியர், இவர் என் ஆசிரியர் என்று கூறக் காது பட கேட்டு இருக்கிறோம்.ஏன் ஒரு குமஸ்தாவைப் பார்த்து இவர் என் கூடத்தான் பணியாற்றுகிறார்;சமுதாயத்திற்காக உழைக்கிறார் என்று எவரேனும் கூற வேண்டியதுதானே?ஏனென்றால் ஆசிரியர்கள் இளைய சமுதாயத்தை மாணவர்களின் 5-வது வயதில் இருந்தே (பாலர் பள்ளி)அவர்களுக்காக உழைக்கிறார்க்ள்;உருவாக்குகிறார்கள்.

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் சொன்னது…

கனிந்த வணக்கம். தெ.ஆ.ப.கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் குழுவாக வலைப்பதிவு செய்வதை அறிந்து நெகிழ்கிறேன்.

எப்போதோ போட்ட விதை இப்போது வளர்கிறதே என்று எண்ணும்போது (http://vivegam.blogspot.com/2004_08_01_archive.html- இது பழைய வலைப்பூ) மகிழ்ச்சிதான்.

நல்ல முயற்சி.தொடர்க!

பெயரில்லா சொன்னது…

:) நல்லா இருக்கு...விக்னேஸ் & மேகலை தொடருங்க...

///தமிழ் மொழி அறிவு இல்லாத;
தமிழினப் பற்று இல்லாத;
தமிழ்ச் சமயத் தெளிவு இல்லாத;
பகுத்தறிவுச் சிந்தனை இல்லாத;
ஆசிரியர்கள் நிறையபேரை கண்கூடாகக் காணமுடிகிறது!!

வெறும் வயிற்றுப் பிழைப்புக்காகவும்
கூலிக்கு மாறடிக்கும் கூட்டமாகவும்
ஆசிரியர்கள் இருக்கக் கூடாது!!

பிறந்த இனத்திற்கும்
பெற்றிருக்கும் தாய்மொழிக்கும்
தக்கனவற்றைச் செய்யும் தகுதியையும் தரத்தையும் ஆசிரியர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.///

வெறும் சொற்கள் அல்ல இவை...மனதை நெருட செய்து..சிந்திக்கவும் வைத்தது! நன்றி

அனைத்து ஆசிரியர்களுக்கும் இது போய் சேர வேண்டும்!

//நீங்கள் நல்லாசிரியர்களாக உருவாகி மொழி, இன, கலை, பண்பாட்டு நிலையில் தாழ்ந்திருக்கும் தமிழ் மாணவரைக் கைதூக்கிவிட வேண்டும்.

செய்வீர்களா?//

நிச்சயமாக...உடலில் உயிர் உள்ளவரை, உயிரில் ஜீவனுள்ள வரை...பணி செய்து வாழ்வேன்!!!

tamil info சொன்னது…

அரிஸ்டாட்டில் தம் மாணவர்களுடன் ஓர் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை ஆற்றங்கரையில் நிற்க வைத்த அரிஸ்டாட்டில், நான் ஆற்றின் அக்கரை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா எனப் பார்த்து வருகிறேன் என்றார். அவர் அதற்குத் தயார் கொண்டிருந்த சமயம், அவரின் மாணவர் யுவந்துஸ் தண்ணீரில் நீந்திச் செல்வதைக் கண்டார். மறுகரை வரை சென்று திரும்பிய யுவந்துஸ், குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றைக் கடக்கலாம் என்றார். அப்போது அரிஸ்டாட்டில் அவனிடம், உன்னைச் சுழல்கள் இழுத்துச் சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அவன், இந்த யுவந்துஸ் போனால், ஆயிரம் யுவந்துஸ்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஓர் அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்துப் போவோம் என்றான்.