புதன், 24 செப்டம்பர், 2008

உலகம் வியக்கும் காதலே!

ஷாஜஹான் தனது காதல் மனைவிக்கு அன்பின் அடையாளமாக தாஜ்மஹால் எழுப்பியது மாதிரி பெண்களில் கணவனுக்காக பிரமாண்டமான நினைவுச் சின்னத்தை அமைத்த வரலாறு.....


பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியான காரியா எனும் நாட்டை, முன்பு (கி.பி 377) ஒரு சிற்றரசன் ஆட்சி செய்தான்.
அவன் பெயர் மாசோலஸ் (அவர்கள் மொழியில் ஆணழகன்).
அவனை ஆர்ட்டிமிர்ஸியா என்ற பெண் காதலித்தாள்..
இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தார்கள்.
திருமணம் செய்துகொண்டார்கள் அன்பைப்பொழிந்து வாழ்ந்து வந்தனர்... துரதிர்ஷ்டவசமாய் மாஸோலஸ் நோய்வாப்பட்டு,
இளம் வயதிலேயே இறந்து போனான்..
ஆட்சிப்பொறுப்பை ஏற்கவேண்டிய கட்டாயம் அவளுக்கு...
ஆனால் அவனது நினைவு அவளை மிகவும் வாட்டியது
மனதிற்குள் அழுதாள், புலம்பினாள்.
அந்த நினைவுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தாள்..
உலகத்தின் புகழ்ப் பெற்ற சிற்பிகள் வரவழைக்கப்பட்டார்கள்..

36 தூண்கள் அமைக்கப்பட்டன..
விண்முட்டும் அளவில் 24 அடுக்குகள் கொண்ட விமானம் அமைக்கப்பட்டது.. நடுவில் கல்லறை..
அதற்குமேல் மாசோலஸ் மன்னருடைய பிரமாண்ட சிலை..
கல்லறைக்குச் செல்ல 200 படிகள்..
கண்ணைக் கவரும் ஓவியங்கள்..
இப்படி எல்லாரையும் கவரும் வகையில் நினைவுச் சின்னம் அமைத்து
அதற்கு மாசோலியம் என்று பெயரிட்டாள்.


இது உலகின் பழம்பெறும் கலை அதிசயமாக போற்றப்பட்டு வருகிறது.
மேலும் இம்மன்னரின் பெயர் இது போன்ற கட்டிட கலை மற்றும் அமைப்பு கொண்ட அனைத்து கட்டிடங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மனைவிக்காக ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால், மாசோலஸிற்கு காதல் மனைவி கட்டிய உன்னத மாசோலியம்!
உணர்ந்தால்…காதல் உயிரானது! என்றும் உயர்வானது!

ஆக்கம்: மலர்விழி சுப்ரமணியம்
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நன்றி விக்னேஸ் :)

priyamudanprabu சொன்னது…

காதலிக்கு காதலன் கட்டிய தாஜ்மகால் மாட்டுமே எனக்கு தெரியும்

புதிய தகவல் தந்த மலருக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

@ பிரபு

நன்றி. மீண்டும் வருக, கருத்தைப் பகிர்க!

பெயரில்லா சொன்னது…

தெரியாத ஒன்றை தெரிய வைத்த மலர்விழிக்கு நன்றி...தொடர்க உம் பணி...

பெயரில்லா சொன்னது…

தாஜ்மகால் ஒரு காதலின் கல்லறை என்பது என் கருத்து... தாஜ்மகால் என்னும் உலக அதிசயக் கல்லறையில் சாஜகான், மும்தாஜின் காதல் தூங்குகிறது..... இதில் என்ன அதிசயம்...?