அடியேனின் உயிருக்கு ஈடாக நினைக்கும் தமிழைப் பற்றி பேசுவதற்க்கு அடியேனின் நெஞ்சங்கள் அலைந்து கொண்டிருந்தன, அதனை இன்று உலகளவில் பரப்புவதற்கு இதுவே தக்க தருணம். பல்லாயிர வருடங்களுக்கு முன்பு தோன்றியது நமது தாய் மொழி என்று பெருமைப் பட பேசுவதற்கு பலர் உள்ளனர்; அது போலவே அதனை உலகிற்கும் பரப்ப பாடு பட வேண்டும், காரணம் பல்லாயிர வருடங்களுக்கு முன்பு தோன்றினாலும் இன்று தமிழின் பெருமை வெறும் பேச்சளவில் பேசப்படுபவையாகவே அமைந்துள்ளது. தமிழ் மொழி இன்றும் உலகளவில் மூன்றே மூண்டு நாடுகளில் மட்டும்தான் தேசிய மொழியாக அங்கீகரிக்க பட்டுள்ளது. நமது மலேசியாவில் தமிழர்களின் எண்ணிக்கை மூன்றாவது பெரும்பான்மை இனமாக கூறப்பட்டாலும் இன்றளவிலும் தமிழை மதிப்பவர்கள் மிக குறைவு என்று ஆணித்தரமாக சொல்லலாம். நமது நாட்டில் தமிழர்களே தமிழ் பேசுவதற்கு தயங்குகின்றனர்; அப்படி இருக்கையில் மலேசியாவில் அடியேனின் தாய் மொழி எப்படி வளரும்?? எப்படி தழைத்து ஓங்கும்??? அடியேனின் கேள்விக்கான பதில்...................
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)
2 கருத்துகள்:
நண்பரே,
உங்களின் முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள். தோழர் சதிஸ்குமார் அறிமுகம் செய்து உங்கள் தளம் வந்தேன். மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.
ஒரு சின்ன ஆளோசனை. கோபிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
1) பத்தி பிரித்து எழுதுங்கள். வாசகர்களுக்கு படிக்க சுலபமாக இருக்கும். மலைப்பைக் கொடுக்காது.
2) சொற்றொடர்களை குறுகிய வரிகளில் எழுதினால் படிப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.
அன்புடன்,
விக்னேஷ்
வணக்கம் தமிழ் அன்பரே,
தங்களின் புதிய வலைப்பதிவு கண்டேன். தாய்மொழி என்ற நல்ல பெயரைத் தெரிவு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.
மலேசியாவில் தமிழ் இணைய வளர்ச்சி வளர்ந்து வருவதற்கு தாய்மொழி புதிய சான்றாக அமைந்துள்ளது.
தாய்மொழியில் நல்ல பயனான இடுகைகளை எதிர்பார்க்கிறேன்.
தாய்மொழி வலைப்பதிவை என்னுடைய 'திருமன்றில்' திரட்டியில் இணைத்துள்ளேன். பார்க்கவும். இதன் வழியாகத் தங்கள் வலைப்பதிவை உலக அளவில் பலரும் பார்க்க வாய்ப்பு உண்டாகும். இதனால் தாங்கள் மேலும் ஊக்கத்தோடு எழுதுவீர்கள் என நம்புகிறேன்.
மலேசிய வலைப்பதிவுகளைப் பார்வையிட்டு, மாறுபட்ட கோணத்தில் உங்கள் வலைப்பதிவை வடிவமைக்கவும். நீங்கள் பார்க்கும்; படிக்கும் வலைப்பதிவு இடுகைகளுக்கு மறுமொழி எழுதவும். நீங்கள் எழுதும் மறுமொழியைப் படித்துவிட்டு அங்கிருந்து உங்கள் 'தாய்மொழிக்கு' பலரும் வருவார்கள்.
நல்ல தொடக்கம்.. தொடருங்கள்!
தாய்மொழி வெல்லட்டும்.. வாழ்த்துகள்!
கருத்துரையிடுக