வியாழன், 25 செப்டம்பர், 2008

அடியேன் எண்ணங்களில் அலைபாய்ந்து கொண்டிருக்கும்,மலேசியாவில் இன்றைய தமிழின் நிலைமை. (அலைகள் இரண்டு)

நாம் பேசியவை அனைத்தையும் மறுபடியும் சிந்திப்போம் மீண்டும் தொடருவோம்.... இன்றைய சிறு எண்ணம் யாதெனில் பெற்றோரின் கடமையாகும்.ஆம் தமிழை வளர்க்க பெற்றோரின் கடமையே மிக முக்கியம் என கூறலாம். நமது நாட்டில் தமிழின் நிலைமை மங்கி போய விட்டது போல் தோன்றுவதற்கு இந்திய பெற்றோர்களே மூலக் காரணம்.


அதாவது அன்பர்களே பெற்றோர்கள் பலர் தாய் மொழியான தமிழ் மொழி மீது அக்கறை கொள்ளாமல் தங்கள் பிள்ளைகளை தேசிய மொழி பாட சாலைக்கு அனுப்பி வைக்கின்றனர். இம்மாதிரியான சம்பவம் நமது நாட்டில் பரவலாக நிலவுவதற்கு அடிப்படையே இந்திய பெற்றோர்களின் தவறுதலான அபிப்ராயமே! அதாவது பெரும்பான்மையினர் தமிழ் பள்ளி கூடங்களுக்கு அனுப்பினால் தங்கள் பிள்ளைகள் தேசிய மொழியையும், ஆங்கில மொழியையும் சரியாக கற்று கொள்ள மாட்டார்கள் என்றும் மறு பக்கம் ஆசிரியர்கள் தமிழில் மட்டுமே போதித்து , பெரும் அளவில் தமிழிலே புரிய வைப்பதாக எண்ணி பிள்ளைகளின் மொழி ஆற்றலை வலு படுத்தாது; என்றும் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர். ஆக, பெற்றோர்கள் தங்களின் தவறான மன போக்கை தவிர்ப்பது நல்லது.

மேலும் சொல்ல போனால், சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளிக் கூடத்திற்கு அனுப்பாத காரணத்தை கேட்டால், பள்ளியின் நிலவரத்தை சுட்டி காட்டி அழகான மறுப்பு பதிலை தருகின்றனர்.சுருக்கமாக சொல்ல சொன்னால் நமது தமிழ் பள்ளி கூடத்தின் தரம் உயர வில்லை மாறாக சரிகின்றது என பொருள் விளங்குகின்றது. அவர்கள் சொல்வதிலும் ஓரளவிற்கு உண்மை உண்டு ஆம், தமிழ் பள்ளி கூடங்களும் தேசிய மொழி பள்ளியை போலவும் சீன பள்ளி கூடங்கள் போலவும் காட்சி தந்தால் ; பெயர் பெற்றால் , சிறந்து விளங்கினால் நிச்சயம் நமது மலேசிய இந்தியர்கள் தங்களது செல்வங்களை தமிழ்ப்பள்ளிக் கூடங்களுக்கு அனுப்புவார்கள் என நம்புவோமாக.......

எண்ணங்கள் மீண்டும் அலை பாயும் .........

ஆக்கம்: கீர்த்தி செல்வராஜூ
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

2 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

வணக்கம்,

'தாய்மொழி' ஒரு கூட்டுப் பதிவு எனத் தெளிகிறேன். இக்கூட்டுப் பதிவில் எத்தனைப் பேர் கட்டுரைகளைப் படைக்கிறீர்கள் என அறிய விழைகிறேன்..

நன்றி.

VG சொன்னது…

வணக்கம், இந்த பள்ளியை பற்றிய ஒரு இனிப்பான தகவல் என்னவென்றால் அங்கு உள்ள மாணவர்கள் குளிர் சாதன அறைகளில் படிகிறார்கள். எந்த தமிழ் பள்ளியிலும் இல்லாத ஒரு வசதி அங்கு உள்ள ௱கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கிடைத்து உள்ளது. ஆனால், அவர்களுக்கு இன்னும் ஒரு மாற்று இடம் கிடைக்காதது வருத்தம் தர கூடிய விஷயம் தான்.

விடிவெளி பிறக்க பிரார்திப்போம். :)