தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
நான் பிறந்தது ஜொகூரில் ,
ஆனால் வளர்ந்தது சிரம்பானில்,
மீண்டும் வந்தேன் பிறந்த மண்ணிற்கே,
14ஆம் தேதி என் கால் தடம் 18 வருடங்களுக்குப் பிறகு ஜொகூரில் பட்டது.
புதிய நண்பர்கள்,
புதிய சுற்றுச்சுழல்,
புதிய முகங்கள்,
புதிய அனுபவங்கள்,
இருந்தாலும்,அன்பான வரவேற்பு என்னை மாற்றியது.
திறமையான ஆசிரியர்கள்,
"அன்பும் பண்பும் நிறைந்த சீனியர்ஸ்",
பல மாநிலங்களில் இருந்து வந்த நாங்கள் ஒன்றாக்கப்பட்டோம்.
கண்டிப்பான அப்பாவைப் பிரிந்து,
அன்பான அம்மாவைப் பிரிந்து,
வந்த சோகங்கள் இங்குள்ள நண்பர்கள்,
மூத்தவர்களால் போக்கப்பட்டது.
முதல் நாள் ஐந்து ஆண்டுகள் எப்போது முடியுமென்று எண்ணினோம்,
ஆனால், இரண்டாவது நாளே ஐந்து வருடங்கள் முடிந்துவிடக்கூடாது என்று கடவுளை வேண்டினோம்.
ஒரு வாரம் உருண்டோடியது,
புதியதொரு வாரமும் வந்தது,
புதிது வாரம் மட்டுமல்ல,
எங்களின் லட்சியமும்தான்.
ஆக்கம்: கலையமுதன் ரவீந்திரன்
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)
2 கருத்துகள்:
//முதல் நாள் ஐந்து ஆண்டுகள் எப்போது முடியுமென்று எண்ணினோம்,
ஆனால், இரண்டாவது நாளே ஆந்த ஐந்து வருடங்கள் முடிந்துவிடக்கூடாது என்று கடவுளை வேண்டினோம்.
//
சகஜமாய் அனைவரும் (கல்லூரியின் முதல் நாள்) நினைப்பது இதுதான் போலும்! ஒரு கருத்து கணிப்பு செய்ய வேண்டுமப்பா!
//ஒரு வாரம் உருண்டோடியது,
புதியதொரு வாரமும் வந்தது,
புதிது வாரம் மட்டுமல்ல,
எங்களின் லட்சியமும்தான்.//
ம்..பலே..பலே...உற்சாகம் பிறந்து விட்டதா!? வாழ்த்துகள்...சாதிக்க பிறந்த, புதிய பல சாதனையாளர்களைப் படைக்க போகும் படையல்லவோ நாம்!
சாதனை நனம் வசம்...தொடருவோம், கல்வி வேள்வியை!
சிறப்பான முயற்ச்சி...
கருத்துரையிடுக