புதன், 15 ஏப்ரல், 2009

தமிழ் திங்களும் இயற்கை அன்னையும்

ஒவ்வொரு தமிழ் மாதமும் சிறப்பு பல நிறைந்தவை. பருவகால மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். பன்னிரெண்டு மாதமும் அழகானவை. அதிலும் அழகு அம்மாதங்களை நம் முன்னோர்கள் அற்புத சொற்றொடர்களில் விளக்கிய விதம். தமிழ் குழந்தை இயற்கை அன்னையிடத்தே தவழ்வதை இரசிப்போம்...


சித்திரையில் சோலை தழைக்கும்.

வைகாசியில் காற்று வாய் திறக்கும்.

ஆனிக்காற்று அலறி வீசும்.

ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்.

ஆவணியில் மேகம் தாவணி போடும்.

புரட்டாசி வெயில் பொன்னுருகச் காயும்.

ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்.

கார்த்திகையில் கன மழை பொழியும்.

மார்கழி பனி ஊசியாய் துளைக்கும்.
தைப் பனி தரையே நடுங்கும்.

மாசியில் மாம்பூ பூக்கும்.

பங்குனி வெயில் படையைக் கலக்கும்.

மலர்ந்திருக்கும் இந்த ஆண்டு அனைவருக்கும் எல்லா நலமும் தந்து
அனைவரும் வளமுடன் வாழ இறைவனைத் தியானிப்போம்_
பகைமையை அன்பால் வெல்வோம்!

- தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! -

ஆக்கம்
: மலர்விழி சுப்ரமணியம்

வியாழன், 1 ஜனவரி, 2009

புத்தாண்டு வாழ்த்துகள்


இன்று முடிவு நாளை தொடக்கம்

இதுதான் உலக நீதி,


தோல்வி கண்டால் வெற்றி உண்டு,

இதுதான் வாழ்க்கை நீதி,


முடிந்ததை விடுவோம்,

நடப்பதை நினைப்போம்....


விதியென்ற ஒன்றை,

மதிகொண்டு வெல்வோம்....


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....


ஆக்கம் : வசந்தராவ் அப்பளசாமி

தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

புதன், 31 டிசம்பர், 2008

புதிய ஆண்டு



இன்னும் சில மணி நேரத்தில் நாம் ஒரு புதிய ஆண்டினுள் கால் தடத்தை பதிக்க உள்ளோம். புதிய முகங்கள், புதிய சுற்றுச்சூழல், புதிய இடங்கள், புதிய கனவுகள் போன்ற புத்தம் புது விஷயங்களை நாம் சந்திக்க உள்ளோம். கடந்த வருடத்தில் நடந்த நல்ல விஷயங்களை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்வோம். கெட்டதை மறந்து விடுவோம். பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற புதிய உலங்கங்களுக்கு செல்லும் அணைவருக்கும் எங்களின் வாழ்த்துகள்.எங்களின் வலைப்பதிவின் சார்பாக அணைவருக்கும் எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.




ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

திங்கள், 29 டிசம்பர், 2008


நல்லாசிரியரின் நல்லியல்புகள்

தோற்றப்பொலிவு
சுறுசுறுப்பு
தூய உள்ளம்
நேரிய வாழ்க்கை
மொழிப் பற்று
மொழிப் புலமை
அறிவாற்றல்
உணர்திறன்
உணர்த்தும் திறன்
கற்பனைத் திறன்
சொல்லும் திறன்
விளக்கும் திறன்
தெளிவுற அறிந்திடுதல்
மாணர்வர்களிடத்து அன்பு
உடன் ஆசிரியர்களிடம் நல்லுறவு
வரலாற்றுணர்வு
அறிவியல் அணுகுமுறை
விழிப்புணர்ச்சி
அறியும் அவா
ஆய்வு வேட்கை
பயிற்றுவித்தலில் ஆர்வம்
காலம் போற்றுதல்
சமூகக் கடமையுணர்வு
வாய்மை
தனித்தன்மை
தலைமைப் பண்பு
வழிகாட்டுதல்
தியாகம்
சான்றான்மை

எல்லா ஆசிரியர்களுக்கும் இந்த பண்புகள் இருக்க வேண்டும் என்று கூற முடியாது. இவை அனைத்தும் இருந்தே ஆக வேண்டும் என்றுதான் கூறவேண்டும்......

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி


வெள்ளி, 26 டிசம்பர், 2008

இன்றைய திகதியில்

கடந்த வருடம் இதே திகதியில் மனித இனத்தை அழிக்கும் சக்தி வாய்ந்த சுனாமி என்ற பேரலை எத்தனையோ மனித உயிர்களை மூழ்கடித்தது. வருடங்கள் உருண்டோடினாலும் அந்த பேரலையின் நினைவுகள் சிலரின் எண்ணத்தில் இன்னும் பசுமையாக உள்ளது. இன்று வரை இதற்கு இயற்கை காரணமா இல்லை மனிதர்கள் மீது இந்த பூமி தாய் கொண்ட ஆத்திரமா என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. இது போன்ற சுனாமி அலை மீண்டும் நிகழுமா என்பது கடவுளின் கையில் தான் உள்ளது.

இந்த சுனாமி பேரலையில் தப்பித்தவர்கள் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களில் ஒருவர் மேழுள்ள படத்தில் உள்ள குழந்தைதான்.யாரென்று தெரிகின்றதா ?

ஆம் துளசி என்ற குழந்தைதான் அது. நூற்றுக்கணக்கான மனிதர்களை கொன்ற அதே நீர்தான் இந்த குழந்தையை காப்பாற்றியது.அலையில் அடித்து செல்லப்பட்ட குழந்தை மீண்டும் அதே அலையில் மிதந்து கொண்டே உயிர் தப்பியது.பாவம் இந்த குழந்தையை கொல்ல அந்த பேரலைக்கு மனசு வரவில்லை என நினைக்கின்றேன்.

இந்த பேரலை மீண்டும் நிகழாமல் இருக்க நாம் கடவுளை பிராத்தனை செய்வோமாக ........

இந்த பேரலையின் அழிவை யாராலும் மறக்க முடியாது.

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

வியாழன், 25 டிசம்பர், 2008

கிருஸ்துமஸ் வாழ்த்துகள்


இந்த இன்பமான நாளில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடும் அனைத்து கிருஸ்துவ குடும்பங்களுக்கும் எங்களின் வலைப்பதிவின் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த கிறிஸ்துமஸ் தினம் உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அளிக்கும் என்பதில் சிறதும் சந்தேகம் இல்லை.

வாழ்த்துகளுடன்
தாய்மொழி வலைபதிவார்கள் குழு

வெள்ளி, 19 டிசம்பர், 2008

முக்கிய தினங்கள்

நமது நாள்காட்டியை அடக்கடி பார்ப்பது ஒரு வழக்கமான செயல். ஆனால் சில தேதிகள் சில முக்கிய தினங்களாக விளங்குகின்றன.அவைகளில் சில உங்களுக்காக.

மே 1- உலக தொழிலாளர் தினம்.

ஜனவரி 31- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்.

ஏப்ரல் 7- உலக சுகாதார தினம்

ஏப்ரல் 22- உலக பூமி தினம்

மே 3 - அனைத்துலக ஆற்றல் தினம்.

மே 31 - புகையிலை இல்லாத தினம்

ஜுன் 5 - உலக சுற்றுச் சூழல் தினம்

நவம்பர் 14 - உலக நீரழிவு தினம்

டிசெம்பர் 1 - உலக எய்ட்ஸ் தினம்

டிசம்பர் 10 - மனித உரிமைகள் தினம்

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

அன்பே செல்வம்


'அள்ளக் குறையாதது;கொடுத்தால் தீராதது' என்று கல்வியைப் பற்றிச் சொல்வார்கள். அன்பும் அப்படித்தான். கல்வியை விடவும் மேம்பட்டது அன்பு!

நாம், நம் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், என்கிற எல்லைகளைக் கடந்து , எலோரிடமும் அன்பு காட்டும் தன்மை தான் தெய்வகுணம்!

தனக்கு
உதவியவர்களை மட்டுமல்ல; தனக்குத் துன்பம் தந்தவர்களையும் மன்னித்து இரட்சிக்கும் படிவேண்டிய அந்த தெய்வ குணத்தின் அடையாளம்தான் இயேசு பெருமான்!

அன்பு
என்பது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது; எந்த விதத்திலும் சுயநலம் அற்றது; எல்லா உயிர்களிடமும் நேசம் கொண்டது; எந்த சிவனிடமும் வெறுப்பில்லாதது என்கிற உண்மை விளக்கமாக உலவிய இயேசு பெருமானின் அவதாரத் திருநாள் இந்த மாதம் வருகிறது.

அந்த
அன்பு நம் அனைவரின் எண்ணங்களிலும், செயல்களிலும் இடம் பெறட்டும். அதுதான், கிருஸ்துமஸ் திருநாள் நமக்கு உணர்த்தும் செய்தி!

ஆக்கம்:கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

புதன், 3 டிசம்பர், 2008

நல்லதோர் விடுமுறை............

பள்ளி மாணவர்களே மற்றும் எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம். எழுதி முடித்த மாணவர்களே உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்துக்களை தெரிவிப்பதோடு இந்த விடுமுறையை நல்வழியில் கழிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடத்தை மறந்து விடாதீர்கள் வருகின்ற ஆண்டுகளில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை இப்பொழுதே யோசிக்க துவங்குங்கள். நாட்களை வீணே செலவழிக்காமல் நாட்டுக்கும்,வீட்டுக்கும்,சமுதயதிர்க்கும் மேலும் உடலுக்கும் நன்மை விளைவிக்கும் வகையில் பயன் படுத்துங்கள்.

காலத்தை நாம் மதிப்போம் போற்றுவோம்;காலம் நம்மை அழைத்து செல்லும்...
ஆக்கம்:கீர்த்தி செல்வராஜு
தெமேங்கோங் இப்ராஹிம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி

புதன், 26 நவம்பர், 2008

கைத்தொலைபேசி:அவசியமா, அனாவசியமா?


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதர்கள் தத்தம் அன்றாட வாழ்க்கையில் பல புதிய சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட பொருள்கள் நமது நேரத்தைச் சேமிக்கின்றதென சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர், இந்தக் கருத்தை மறுத்துத் தற்கால சாதனங்கள் மனித குலத்தின் மத்தயில் சோம்பல் குணத்தை வளர்க்கின்றன என்றும் கூறியுள்ளனர். எது எப்படி இருப்பினும், இன்றுவரை மனிதர்களுக்கு உதவியாகவும் அதற்கு மாறாக அபாயகரமாக விளங்குவதும் கைத்தொலைபேசி என்றே கூறலாம்.

ஒரு கைத்தொலைபேசியின் மூலம் நாம் ஒரு தகவலை மிகவும் சுலபமாக மற்றொருவரிடம் சேர்த்துவிடலாம். அவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி அந்தத் தகவலைத் தேவையானவரிடம் சேர்த்துவிடலாம். கூற வேண்டிய தகவலை நம்மால் கூற முடியாமல் போனாலும் குறுந்தகவல்(S.M.S) என்ற எளிய முறையில் நாம் அந்தத் தகவலைச் சேர்த்துவிடலாம். இந்த முறை தற்பொழுது இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகின்றது. ஒருவரிடம் அழைத்துப் பேசுவதைத் தவிர்த்து, இவ்வாறு செய்வதால் பணமும் சிக்கனப் படுத்த முடியும். தற்கால கைத்தொலைபேசிகளில் உள்ள சில தொழில் நுட்ப விஷயங்கள் பலரை பிரமிக்க வைக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. படம் பிடிக்கும் வசதி, செவிக்கு இனிய கானங்கள் கேட்பதற்கும், ஏன் இணையத்தை வலம் வர கூட வாய்ப்பு தந்திருக்கின்றது கைத்தொலைபேசி.

எது எப்படி இருந்தாலும், கைத்தொலைபேசி சில நேரங்களில் அனாவசியமாகவும் தோற்றமளிக்கின்றது . தொலைப்பேசியின் கட்டணம் கட்டப்படாமல் இருந்தாலோ அல்லது கைத்தொலைபேசியில் போதிய பணத்தொகை இல்லாமல் போனாலும் நாம் ஒருவரை தொடர்பு கொள்ள முடியாது. ஏன்,ஒரு குறுந்தகவல் கூட அனுப்ப முடியாது. சிலர், கைத்தொலைபேசியைத் தொல்லைபேசியாக மாற்றுகின்றனர். பொது இடங்களிலும், பள்ளிகளிலும், கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு கைத்தொலைபேசியின் பயன்பாட்டினால் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது எனக் கண்டறியப்பட்டு கூறப்பட்டாலும், அது நிருபனமாக்கப்படவில்லை. மேலும், கைத்தொலைபேசியின் தொடர்பு அலை மருத்துவமனைகளில் உள்ள சில கருவிகளின் வாசிப்பைத் தவறுதலாகத் தருவதால், நோயாளிகளுக்கு அபாயகரமான விளைவுகளை விளைவிக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.

ஆகவே, கைத்தொலைபேசியின் பயன்பாடு மனிதர்களுக்கு நன்மையும் அளிக்கின்றது, தீமையும் அளிக்கின்றது என்றே கூற வேண்டும். குறிப்பாக, மாணவர்களாகிய நாம் கீழ்க்காணும் விதிகளைக் கடைப்பிடித்தால் அனைவருக்கும் நன்மையே:
1. கருத்தரங்கிலோ அல்லது கூட்டத்திலோ கலந்து கொள்ளும்போது கைத்தொலைபேசியின் ஒளியை அமைதி நிலையில் () வைக்கவும் அல்லது அடைத்து விடவும்.
2. பலர் இருக்கும் இடத்தில் தொலைபேசியில் உரையாடும்போது குரலைத் தாழ்த்திப் பேச வேண்டும்.
3. முக்கியமான அழைப்பு கிடைத்தால், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்று பேசலாம்.
4. குறுந்தகவல் அனுப்புவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
5. கைத்தொலைபேசியை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். பாட நேரத்திலோ அல்லது கலந்துரையாடலின் போதோ பயன்படுத்துவது நமது கல்விக்கும் பணத்துக்கும் கேடு என்றால் அது மிகையாகாது.

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி