செவ்வாய், 4 நவம்பர், 2008

உண்மை அன்பு எங்கே…இதோ பாருங்கள்…

ஞானி ஒருவர் கூறுகிறார், “வானத்தைப் பிழிந்து மழையாக்குவதும், மழையை வானமாக்குவதும் எனக்குச் சுலபம். ஆனால், என் சக்தியை நிரூபிக்க அது மட்டும் போதாது…உண்மையான சக்தி அன்பு”.

அன்பினால் மட்டுமே ஒரு மனதைத் தொடவும் மனதின் தன்மையை மாற்றவும் முடியும்! “அன்பே சிவம்”, “சிவமே அன்பு” கடவுளை நம்புகின்றவருக்குக் கடவுளே அன்பு. நாத்திகருக்கு அன்பே கடவுள். இதிலிருந்து மீள்பவர் எவருமிலர். திருமந்திரத்தில் திருமூலர் இதையே அழகாய் பாடியும் உள்ளார்,

“ அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.”

இறைவனது தோற்றம் மங்களகரமானது. இருப்பிடமும் மங்களகரம். அன்பை நுகருபவர் இறைவனை அடையும் வழியை எளிதில் பெறுவர்.

கொடுப்பதும் மன்னிப்பதும் அன்பு; பெறுவதும் மறப்பதும் வாழ்க்கை.

Love lives by giving and forgiving; self lives by getting and forgetting.

நல்லவராய் இருப்போம்; நல்லதே செய்வோம் (be good, do good) நமக்கும் நல்லதே நடக்கும்!

உண்மை அன்பில் இறைவன் குடிகொண்டுள்ளான் என்பதை நாம் உணர வேண்டும். இறைவனை தேடி அலையாதீர். அவன் உங்களிடமுள்ள அன்பில் இருக்கிறான். அன்பை அனைவரிடத்திலும் செலுத்துங்கள், இறைவன் உங்களை அவன் அருளால் அணைப்பான். உங்களை வெறுப்பவர்களை நீங்கள் விரும்புங்கள், உங்களை விரும்புகிறவர்களை ஒரு போதும் வெறுக்காதீர்!

இதோ கள்ளங்கபடமற்ற அன்பைப் பொழியும் இந்த மழலைகளிடத்திலும் அவன் இருக்கிறான்…


உண்மை அன்பைப் பார்த்தீர்களா?!


என்றென்றும் அன்புடன்,
மலர்விழி சுப்ரமணியம்

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Yaar Yaar Sivam,Nee Naan Sivam
Vaazhuae Dhavam, anbe Sivam

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு..!

நல்ல இடுகை தோழி. திருமந்திரத்தை மேற்கோள் காட்டியது நன்று!

பெயரில்லா சொன்னது…

//அன்பை நுகருபவர் இறைவனை அடையும் வழியை எளிதில் பெறுவர்.//

நன்று.

அன்பின் திறத்தை நன்கு விளக்கியுள்ளீர்கள்.

வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

@ சுப.நற்குணன் - மலேசியா & அ. நம்பி

mikka nandri...thanggalin uukkam enggal uyarvu :)

priyamudanprabu சொன்னது…

///
“வானத்தைப் பிழிந்து மழையாக்குவதும், மழையை வானமாக்குவதும் எனக்குச் சுலபம். ஆனால், என் சக்தியை நிரூபிக்க அது மட்டும் போதாது…உண்மையான சக்தி அன்பு”.
//////

அழகு

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்

பெயரில்லா சொன்னது…

nandri prabu...