சனி, 1 நவம்பர், 2008

உறவு


உறவு என்ன நீ அடித்து விளையாடும் பூப்பந்தா?
நீ வா என்று அழைக்கும் பொழுது வரவும்...
போ என்று துரத்தும் பொழுது போகவும்...
நான் என்ன உணர்வற்ற பிணமா?
உந்தன் அன்பை உண்மை என்று எண்ணி என் வாழ்வில் தோற்றுவிட்டேன்....
என் பாசத்திற்குரியவரே! அன்பை புறக்கணிக்காதே காரணம் நீ இன்னல்படும் நேரம்
உன்னை தேடிவருவது உந்தன் பணம் அல்ல உண்மையான பாசம்...
இந்த பிரிவு நிரந்தரம் அல்ல...
எனது பந்தம் தொடரும்...
உன்னை இழந்து தவிக்கும் சின்ன இதயம்

ஆக்கம் :யோகேஸ்வரி தனபால்
தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அடடடா...என்ன ஒரு உணர்வுபூர்வமான கவிதை.இதை அனுபவித்தாலே வரும் கவிதையாயிற்றே!உந்தன் உறவு நீடிக்கும் கண்மணியே!உன் பாசத்தை உணர்ந்து அவர் கண்டிப்பாக வருவார்.களக்கம் வேண்டாம் அந்த சிறு இதயத்தில்....

priyamudanprabu சொன்னது…

///
காரணம் நீ இன்னல்படும் நேரம்
உன்னை தேடிவருவது உந்தன் பணம் அல்ல உண்மையான பாசம்...
///

நச்சுன்னு சொன்ணீங்க