ஒவ்வொரு தமிழ் மாதமும் சிறப்பு பல நிறைந்தவை. பருவகால மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். பன்னிரெண்டு மாதமும் அழகானவை. அதிலும் அழகு அம்மாதங்களை நம் முன்னோர்கள் அற்புத சொற்றொடர்களில் விளக்கிய விதம். தமிழ் குழந்தை இயற்கை அன்னையிடத்தே தவழ்வதை இரசிப்போம்...
சித்திரையில் சோலை தழைக்கும்.
வைகாசியில் காற்று வாய் திறக்கும்.
ஆனிக்காற்று அலறி வீசும்.
ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்.
ஆவணியில் மேகம் தாவணி போடும்.
புரட்டாசி வெயில் பொன்னுருகச் காயும்.
ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்.
கார்த்திகையில் கன மழை பொழியும்.
மார்கழி பனி ஊசியாய் துளைக்கும்.
தைப் பனி தரையே நடுங்கும்.
மாசியில் மாம்பூ பூக்கும்.
பங்குனி வெயில் படையைக் கலக்கும்.
மலர்ந்திருக்கும் இந்த ஆண்டு அனைவருக்கும் எல்லா நலமும் தந்து
அனைவரும் வளமுடன் வாழ இறைவனைத் தியானிப்போம்_
பகைமையை அன்பால் வெல்வோம்!
- தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! -
ஆக்கம்: மலர்விழி சுப்ரமணியம்
4 கருத்துகள்:
உங்களின் முயற்சிகள் பாராட்டுக்கு உரியது.
அனைத்து மாணவர்களின் படைப்புகளும் இடம் பெற்றால் மேலும் சிறப்பு !
முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்!
அன்புடன்,
உங்களுடைய பனி பாராட்டுதலுக்கு உரியது. தொடர்ந்து பதிவிடுங்கள்.
நல்லாயிருக்கு மலர்
தமிழ்ப் புத்தாண்டு தைத்திங்கள் முதல் நாள் அல்லவோ!!! அதற்காக ஒரு பாடலை இயற்றவில்லையா?
இரா. சிவா.
(மாசாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்)
கருத்துரையிடுக