ஞாயிறு, 9 நவம்பர், 2008

தீர்ப்பு நமது கையில்....

ஒவ்வொரு வருடமும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான சோதனை அதாவது யூ.பி.எஸ்.ஆர் தேர்வு தவறாமல் இடம் பெறுகின்றது. இந்த வருடம் சற்று மாறு பட்ட அம்சத்தில் கணிதமும் அறிவியலும் ஆங்கில மொழியில் போதிக்க பட்டு சோதனையும் நடத்தப்பட்டது. யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்கான முடிவுகள் பதின்மூன்றாம் திகதி நவம்பர் மாதம் வெளியேற்ற உள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் செல்வங்களின் முடிவுகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் அவா என்ன ஆகும்?


ஆங்கில மொழியில் கணிதமும் அறிவியலும் போதிக்க படுவது சரியா தவறா என்று விவாதிக்க இது தக்க தருணம் அல்ல, இருப்பினும் வரப்போகும் தீர்ப்புகள் நல்ல தீர்வை காணுமா? அல்லது........? ஆங்கில மொழியில் அறிவியலும் கணிதமும் கற்று தரப்படுவது உகந்ததா இல்லையா என்பதை யூ.பி.எஸ்.ஆர் முடிவுகள் நிர்ணயிக்கும். இடை நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் கணிதமும் அறிவியலும் கற்று தரப்படுவது சரியாக அமைந்தாலும் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழியை விட தாய் மொழியில் கற்று தர படுவதே சிறப்பாக அமையும்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது போலவே காரணமின்றி எந்த ஒரு சிந்தனையும் தோன்றாது. அதாவது ஆங்கில மொழியில் கற்று தர படுவதால் நன்மைகள் உண்டு இல்லை என்று நான் சொல்ல வில்லை ஆனால், அப்படி ஆங்கில மொழியில் கணிதமும் அறிவியலும் கற்று தர படுவதால் நமது தாய் மொழியின் சிறப்பு குறைக்கபடுவதாக தோன்றுகின்றது. மேலும், தாய் மொழியை சரி வர கற்காமல் பிற மொழியில் கற்பதால் தாய் மொழியின் முழு கூறுகளையும் அறிந்து கொள்ள இயலாது. இதைத்தவிர்த்து நமது தாய் மொழியின் அடையாளத்தை நாமே அளித்துக் கொள்ளலாமா?

சுருங்கக் கூறின், தொடக்கப்பள்ளியில் ஆங்கில மொழியில் கணிதமும் அறிவியலும் கற்று தருவதை விட இடை பள்ளியில் தாரளமாக கற்று தரலாம். மேலும் இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கும் யூ.பி.எஸ்.ஆர் தேர்விற்கான முடிவை அற ஆவலாக உள்ளோம். நம்மை தவிர்த்து பெற்றோர்கள்,அரசாங்க நிர்வாகங்கள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள்,அதோடு எழுத்தாளர்கள் ஆகிய அனைவருமே மிகுந்த ஆவலுடன் விமர்சனம் செய்ய காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நல்லதே எண்ணுவோம்,நல்லதே செய்வோம்,நல்லதே நடக்கும்..!

ஆக்கம்:கீர்த்தி செல்வராஜு
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//ஆனால், அப்படி ஆங்கில மொழியில் கணிதமும் அறிவியலும் கற்று தர படுவதால் நமது தாய் மொழியின் சிறப்பின்மை குறைக்கபடுவதாக தோன்றுகின்றது.//

தமிழின் சிறப்புக் குறைக்கப்படுகிறதா, சிறப்பின்மை குறைக்கப்படுகிறதா?

திருத்தம்:

ஆனால் ஆங்கிலமொழியில் கணிதமும் அறிவியலும் கற்பிக்கப்படுவதால் நமது தாய்மொழியின் சிறப்புக் குறைக்கப்படுவதாகத் தோன்றுகின்றது.

தாய்மொழி சொன்னது…

உங்களின் அறிவுரைக்கு நன்றி. தவறுகளை சுட்டி காட்டி நான் செய்த பிழைகளை திருத்திக்கொள்ள துணை புரிந்தமைக்கு மறுபடியும் நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

உங்கள் கருத்து ஏற்புடையதே... ஆனால் ஒரு வகையில் காண்கையில் ஆரம்ப நிலையில் ஆங்கில கல்வி மாணாக்கர்களுக்கு இடைநிலைபள்ளியில் அவர்கள் தடுமாறாமல் இருக்கவும் உதவும்...